Thursday, June 26, 2008

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற மொழிக்கேற்ப கோயில் நாடி வழிபடவேண்டும் . பக்தி நெறி மூலமாக நம்மை உணர்வதற்கு கோயில்கள் அருந்துணை புரிகின்றன .

பண்டைய காலங்களில் கோயில்கள் சமுதாயத்தின் மிக முக்கியமான அங்கமாகும் . கோயில் இறை வழிபாட்டுத்தலமாக மட்டுமின்றி ,
கல்வி கூடமாக கலைக்கூடமாக மக்கள் மன்றமாக பாதுகாப்பு அரணாகவும் திகழ்ந்துள்ளன .

கோயில் நம் பழந்தமிழரின் கலாச்சார பண்பாட்டு நாகரிகம் மற்றும் அரசியல் நிர்வாகம் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ள, கடைபிடிக்க அழியா சான்றாக விளங்குகிறது . கோயில்களை முறையாக காப்பது நமது கடமையாகும்.
தல விருட்சங்களும் , குளங்களும் இயற்கையோடு இணைந்த நம்மக்கள் வாழ்முறைக்கு கட்டியம் கூறுகின்றன .
அத்தகைய சிறப்பு மிக்க சில பழங்கோயில் தரிசனத்திற்கு வழிகாட்டுவதும் பயண ஏற்பாடு செய்வதுமே இந்த திருவுலா வலையின் நோக்கமாகும் .

'தருமமிகு சென்னை ' என்று , வள்ளலார் அவர்களால் புகழப்பட்ட சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள தலங்களே எங்களது முதல் இலக்காகும் .

நவ கோள்களின் (கிரகங்கள் )தரிசனம்

நவகிரகங்களின் அருளும் பார்வையும் நம்வாழ்வினை தீர்மானிக்கிறது .

கோள்களையும் கோள்களின் நாயகனான சிவபெருமானின் அருள்பெற்று வழமோடு வாழ வழிகாட்டுகிறோம்

நவகிரக தலங்கள் ( பரிகாரம் )

ஞாயிறு -சூரியன் : வளமான மகிழ்வான வாழ்வு பெற சூரியன் அருள் புரிகிறார்

காரனோடை- சூரியனார் கோயில்

கொளப்பாக்கம் - அகத்தீஸ்வரர் கோயில்

லிங்கம் , பைரவர் மற்றும் சூரியனையும் சாளரம் மூலமாக ஒரே நேரத்தில் தரிசிப்பது இந்த ஆலயத்தின் சிறப்பாகும்

அழகான நந்தவனமும் , திருக்குளமும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது .

திங்கள் - சந்திரன் : மனக்குழப்பங்கள் நீங்கி மன நலம் பெற சந்திரன் அருள்புரிகிறார்

வட திருமுல்லைவாயில் - மாசிலாமணி நாதர்

சோமங்கலம் - சோமநாதர்

அங்காரகன் - செவ்வாய் :

பூந்தமல்லி - வைத்தீஸ்வரன்

புதன் : கல்வி , கலைகளை அருள்கிறார் புதன்

கோவூர் - திருமெய் ஞான ஈஸ்வரன்

மகாவில்வம்

குரு -வியாழன் :

பாடி - திருவாலீஸ்வரர்
போரூர் - இராமனாதேஸ்வரர்

சுக்கிரன் - வெள்ளி :

மாங்காடு - வெள்ளீஸ்வரர்

மயிலை - வெள்ளீஸ்வரர்

சனி :

பொழிச்சலூர் - சனீஸ்வரன்

ராகு :

குன்றத்தூர் - திருநாகேஸ்வரர் ( வட நாகேஸ்வரம்)

கேது :

கெருகம்பாக்கம் - திருநீலகண்டேஸ்வரர்



No comments: