Wednesday, March 18, 2009

சனி பரிகாரத்தலங்கள்



அரகண்டநல்லூர் ;
விழுப்புரத்தில் இருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது . இராஜகோபுரம் தெற்கு நோக்கியது ..தென்திசை பார்த்த கோபுரம் வழியே நுழைவதால் செய்த பாவங்கள் எல்லாம் விலகும் என்பார்கள் .

இறைவன் - அதுல்ய நாதர் . அதி துல்லியமாக வேத சப்தங்களை அண்டத்தில் உணரச் செய்ததால் இவர் அதி துல்யர் ஆனார் . இப்பெயர் பின்னர் மருவி அதுல்யநாதர் ஆனது .

இறைவி - சௌந்தர்யா கனகாம்பிகை



சனி பகவனுக்கென தனி இடம் .இடுப்பில் கைவைத்தபடி வாகனமான காகத்தில் எறத்தயாரகும் நிலையில் இருக்கிறார் .

வாகனத்தில் ஏறும் தெய்வ வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவை . சக்தி கொண்டவை . அருள் கொண்ட சனி பகவான் தன் பக்தர்களைத் தொல்லையிலிருந்து நீக்குகிறார் .




பாகசாலை ; நாகை மாவட்டம் வைதீஸ்வரன் கோயிலுக்கு தென் கிழக்கில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது .



இறைவன் _ புரந்தரேஸ்வரர் . இந்திரனுக்கு புரந்திரன் என்று ஒரு பெயர் உண்டு . அவனுக்கு அருள் புரிந்ததால் ஈசன் இவ்வாறு அழைக்கப்படுகிறார் .

இறைவி - கல்யாணி அம்பாள்

வடக்குப் பிரகாரத்தில் சனி பகவான் நின்ற கோலத்தில் தனித்திருந்து அருள் பாலிக்கிறார்

Friday, March 13, 2009

சென்னைக்கு அருகில் உள்ள பிணி நீக்கும் சிவாலயங்கள் ;



திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் ;

மிகவும் சிறப்பு வாய்ந்த தொன்மையான ஆலயம் . சிவன் இங்கு அகத்தியருக்கு கைலாய காட்சியை அருளிய இடம் . வான்மீகி முனிவர் வணங்கிய தலமும் இதுவே .



திருக்கச்சூர் மருந்தீஸ்வரரர் ஆலயம் ;


இந்த திருத்தலமும் மிகவும் தொன்மை வாய்ந்த இடமாகும் .


பூந்தமல்லி வைத்தீஸ்வரன் ஆலயம் ;
குபேரனின் ஆலயங்கள் ;


சுருட்டப்பள்ளி - இங்கு உள்ள சிவன் கோயிலில் குபேரன் சன்னதி இருக்கிறது.
இந்த திருத்தலம் சென்னையில் இருந்து ஐம்பத்தி ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது . இக்கோயிலின் சிறப்பம்சம் சிவன் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது



கீவளூர் - அட்சய லிங்கேஸ்வரர் ஆலயத்தில் குபேரன் சன்னதி உள்ளது . அம்பாள் ஸ்ரீசுந்தரகுசாம்பிகை . தாயார் சன்னதியில் குபேரன் உள்ளார்


ஈரோடு - கூடுதுறை ஆலயத்தில் ( பவானி) குபேரன் சன்னதி உள்ளது .
மூன்று ஆறுகள் சேருமிடம் . எனவே மிகவும் சிறப்பு பொருந்திய தலமாகும்.